• Download mobile app
26 May 2026, TuesdayEdition - 3758
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

April 5, 2026 தண்டோரா குழு

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் 2026ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி சேர்பேர்ஷன் நந்தினி ரங்கசாமி தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஹாரத்தி முன்னிலை வகித்தார்.

முதல் அமர்வில் குஜராத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் எஸ். சுந்தர் மனோகரன் கலந்து கொண்டு முதுகலைப் பட்டப்படிப்பு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

இரண்டாம் அமர்வில் கல்லூரி செயலாளர் யசோதா தேவி வரவேற்புரை ஆற்ற, கல்லூரி இயக்குநர் சதாசிவம் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்வில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரஞ்சித் கிருஷ்ண பாய் கலந்து கொண்டு அடிப்படை அறிவியல், சமூக அறிவியல், மானுடவியல் மற்றும் பி.வோக். படிப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வுகளில் மொத்தம் 3,213 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க