July 24, 2017
தண்டோரா குழு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் ஹர்மன்பரீத் கவூருக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போடியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார்.இவருக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது. மேலும், இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்பரீத் கவூரை, பஞ்சாப் மாநில முதலைமைச்சர் பாராட்டி அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதவிர ஹர்மன்ப்ரீத் பஞ்சாப் காவல்துறையில் சேர விரும்பினால், அவருக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்