• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை

February 27, 2019 தண்டோரா குழு

ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இந்திய விமானப்படை நேற்று அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி புகுந்த பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு, ஸ்ரீநகர் விமான நிலையங்களில் ராணுவ விமானங்குக்கு மட்டுமே அனுமதி என்றும், மறு அறிவிப்பு வரும்வரை பயணிகள் விமானிகளுக்கு அனுமதியில்லை என்றும் அறிவித்துள்ளனர். அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க