• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டெர்லைட் ஆலை 2ஆவது யூனிட் விரிவாக்கத்திற்கு – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை!

May 23, 2018 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது பிரிவின் விரிவாக்கத்திற்கு எதிராக பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.அம்மனுவில்,மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தவறான தகவல் கொடுத்து 2 வது யூனிட் துவங்க அனுமதி பெற்றது சட்ட விரோதம்.எனவே,ஸ்டெர்லைட் 2வது விரிவாக்க யூனிட்டிற்கான அனுமதியை ரத்து செய்து, வழங்கப்பட்ட அனுமதி செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,அவ்வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தர், அனிதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பிரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க