January 7, 2026
தண்டோரா குழு
ஸ்கூட் நிறுவனத்தின் அதிரடி ஜனவரி மாதச் சேல்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அங்கமான குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ‘ஸ்கூட்’ , ஜனவரி மாதத்திற்கான சிறப்புச் சலுகை விற்பனையை இன்று அறிவித்துள்ளது.
2026, ஜனவரி 7 முதல் ஜனவரி 12 வரை. இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்ல ஒரு வழிப் பயணக் கட்டணம் வெறும் ரூபாய் .5,900 முதல் தொடங்குகிறது. சிங்கப்பூர் மட்டுமின்றி, அங்கிருந்து ஆசிய-பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகின் பிற முக்கிய நகரங்களுக்கும் மிகக் குறைந்த விலையில் நீங்கள் பயணிக்க முடியும்.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் வெளிநாட்டுப் பயணத்தை இப்போதே திட்டமிடுங்கள்!வருகின்ற 2026 ஜனவரி 28 முதல் அக்டோபர் 24 வரை மேற்கொள்ளும் பயணங்களுக்காகச் சிறப்புச் சலுகை விலையில் டிக்கெட் முன்பதிவுகள் இப்போது தொடங்கியுள்ளன.பாங்காக், புக்கெட், பாலி, ஹாங்காங், சியோல், சிட்னி என நீங்கள் விரும்பும் சுற்றுலாத் தலங்களுக்குப் பயணம் செய்ய இதுவே சரியான தருணம்!சென்னை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம், அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள், இந்த வரம்புக்குட்பட்ட காலச் சலுகையைப் பயன்படுத்தி மிகக் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
சிறப்புச் சலுகைக் கட்டணங்கள் சில:
சென்னை -சிங்கப்பூர்: ரூபாய் 5,900 முதல்,திருச்சிராப்பள்ளி – சியாங் ராய்: ரூபாய் 11,900* முதல்,திருவனந்தபுரம் – மெல்போர்ன்: ரூபாய் 14,900 முதல்,விசாகப்பட்டினம் – பாலி (டென்பசார்): ரூபாய் 9,000 முதல், அமிர்தசரஸ் – ஹாங்காங்:ரூபாய் 12,000* முதல்,கோயம்புத்தூர் – பாங்காக்: ரூபாய் 8,900* முதல் . அமிர்தசரஸ் மற்றும் சென்னையிலிருந்து பயணம் செய்யும் பயணிகள், ஸ்கூட் நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானங்களில் ‘ஸ்கூட் பிளஸ்’ மூலம் தங்களது பயண அனுபவத்தை மேலும் சிறப்பானதாக மாற்றிக்கொள்ளலாம்.
வெறும் 14,900 ரூபாயிலிருந்து தொடங்கும் இந்தச் சேவையில், பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான செக்-இன் மற்றும் போர்டிங் வசதிகள் வழங்கப்படுகின்றன.அத்துடன், கூடுதல் இடவசதி கொண்ட இருக்கைகள், 15 கிலோ வரை கைப்பை மற்றும் 30 கிலோ வரை பதிவு செய்யப்பட்ட பயணப்பைகளை எடுத்துச் செல்லும் வசதி,மற்றும் விமானத்தின் உள்ளேயே பயன்படுத்தக்கூடிய 30எம்பி வைஃபை தரவு போன்ற கூடுதல் சலுகைகளையும் பயணிகள் பெற முடியும்.