• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஷாப்பிங் மாலில் ஆண்கள் ஒய்வு எடுக்க தனி இடம்

July 24, 2017 தண்டோரா குழு

சீனா ஷாங்காய் நகரிலுள்ள ஷாப்பிங் மாலில் ஆண்கள் இளைப்பாற பிரத்தியேக இடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவிலுள்ள ஷாங்காய் குளோபல் ஹார்பர் ஷாப்பிங் சென்டரில் மனைவி ஷாப்பிங் முடித்துவிட்டு வரும் வரை ஆண்கள் ஒரு அறையில் அமர்ந்து ஓய்வெடுக்க தனியாக பிரத்தியோக அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த அறைக்கு “Husband Storage Pod” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த அறையில் தொலைக்காட்சி, மசாஜ் நாற்காலி மற்றும் 199௦-களில் விளையாடப்பட்ட ரெட்ரோ காணொளி விளையாட்டுகளை விளையாட வசதியும் உண்டு.

அந்த அறையை அரை மணிநேரம் பயன்படுத்த 2௦ யூ அன் (3 டாலர்) மற்றும் ஒரு மணிநேரத்திற்கு 3௦ யூஅன் (4 டாலர்) கட்டணம் செலுத்த வேண்டும். ஷாப்பிங் மாலில் இது போன்ற அறை இருப்பது பலருக்கு மகிழ்ச்சியாக இல்லை. தனியாக ஷாப்பிங் செய்வது மகிழ்ச்சியை தருவதில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

விரைவில் அந்த அறையை சுற்றி திரைச்சீலைகள், குளிர்சாதங்கள் மற்றும் ஹெட்செட்ஸ் அமைக்கப்படும் என்று அந்த மாலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க