• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் வந்து ஏமாற்றம்

January 16, 2023 தண்டோரா குழு

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டிருக்கும் நிலையில், இதனை அறியாத மக்கள் பொங்கல் விடுமுறை தினமாக இன்று குடும்பத்தினருடன் வந்து திரும்பி சென்றனர். மீண்டும் வ.உ.சி. உயிரியல் பூங்காவை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

கோவை காந்திரம் நேரு விளையாட்டு அரங்கு அருகில் உள்ள மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்காவில் ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 400 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.பொதுமக்களின் பொழுது போக்கு பூங்காவாக வஉசி பூங்கா இருந்தது. இந்நிலையில், கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. இதனால், பூங்கா மூடப்பட்டுள்ளது. ஆனால் அதில் உள்ள அனைத்து விலங்குகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் விடுமுறை தினமான இன்று மக்கள் அதிகளவில் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவை காணவந்தனர். உயிரியல் பூங்கா மூடப்படிருந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து மக்கள் கூறுகையில்,

வ.உ.சி. உயிரியல் பூங்கா தான் கோவை மாநகரின் ஒரே பொழுது போக்கு பூங்கா. இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தெரியவில்லை. வழக்கம் போல் குடும்பத்தினர் உடன் வந்திருந்தோம். இது எங்களுக்கு பெரும் ஏமாற்றம். மீண்டும் வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்கப்பட வேண்டும்,’’ என்றனர்.

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவை புதுப்பித்து புதிய அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்காவாக மாற்ற திட்டமிட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டு பொங்கலை அடுத்து கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க