• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வ.உ.சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற திட்டம்

December 8, 2022 தண்டோரா குழு

கோவை காந்திரம் நேரு விளையாட்டு அரங்கு அருகில் உள்ள மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்காவில் ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 400 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் பொழுது போக்கு பூங்காவாக வஉசி பூங்கா இருந்தது. இந்நிலையில், கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ரத்து செய்தது. இதனால், பூங்கா மூடப்பட்டுள்ளது.இந்நிலையில், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவை புதுப்பித்து புதிய அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்காவாக மாற்ற திட்டமிட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில்,

தமிழகத்திலேயே மாநகராட்சி சார்பாக பராமரிக்கப்படும் உயிரியல் பூங்காவாக வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. தற்போது, இந்த இயக்கவில்லை. இதனை மீண்டும் உயிரியல் பூங்காவாக இல்லாமல் பறவைகள் பூங்காவாக மாற்றி அமைத்து இயக்க திட்டம் உள்ளது.
அப்படி இல்லை என்றால் கோவை நஞ்சப்பா சாலையில் சிறை மைதானம் பகுதியில் மாநகராட்சி இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா மீண்டும் அமைக்க திட்டம் உள்ளது.

இந்த இரு திட்டங்கள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் நடைபெறும். அதன்பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’’ என்றார்.

மேலும் படிக்க