• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வ.உ. சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் – அமைச்சர் முத்துச்சாமி மரியாதை

September 5, 2023 தண்டோரா குழு

வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாளை ஒட்டி கோவை வ உ சி மைதானத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் முத்துச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாளை ஒட்டி கோவை வ உ சி மைதானத்தில் அமைந்துள்ள அவரது திருவுரு சிலைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து கோவை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள வ உ சியின் திருவுருவ சிலை மற்றும் அவர் சிறையில் இழுத்த செக் ஆகியவற்றிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க