• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைரலாகும் கள்ளகாதல் விவகாரத்தில் குழந்தையை கொன்ற அபிராமியின் டப்ஸ்மாஷ் வீடியோ

September 5, 2018 தண்டோரா குழு

சென்னை அருகேயுள்ள குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இத்தம்பதிக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இதற்கிடையில், குன்றத்தூரில் பிரியாணிக் கடை ஒன்றில் பணியாற்றும் சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த விஜய் அபிராமியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய அபிராமி முயன்றுள்ளார்.
கடந்த 30-ஆம் தேதி கணவன் விஜய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து அபிராமி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் அவரது மகள் மட்டும் இறந்துள்ளார். இதனையடுத்து 31-ஆம் தேதி கணவர் வேலைக்குச் சென்றவுடன் மகனுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். இதில் மகனும் இறந்துள்ளார். கணவன் விஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில் தப்பிச்சென்ற அபிராமியை தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் சுந்தரத்தின் உதவியுடன் நாகர்கோவிலில் வைத்து காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதல் மோகத்தால், பெற்ற குழந்தைகளை தாயே பாலில் விஷம் கலந்து கொன்ற சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. அபிராமி எதிராக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சமூகவளைதளங்களில் அபிராமி – சுந்தரத்தின் டப்ஸ்மாஷ் வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறன்றன. அதில் ஒரு வீடியோவில் பிரபலமான காதல் திரைப்படமான ராஜா ராணி படத்தில் வரும் வசனத்தை இருவரும் டப்ஸ்மாஷ் செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் சுந்தரம்: இதெல்லாம் யோசிச்சு பாத்தாலே நைட் தூக்கம் வருமான்னு தெரியல… அபிராமி: ஆனா இன்னைக்கு நா நல்லா தூங்குவேன்.. எல்லா நைட்டும் என்னக்காக யார் இருக்கா என யோசிச்சாலே பாதி நைட் போய்ரும்… இப்போ புருஷன் நீ இருக்கேல்லா… என்ற அந்த ஆடியோவுக்கு இருவரும் டப்ஸ்மாஷ் செய்துள்ளனர்.

மேலும் படிக்க