உள்ளாட்சி தேர்தலில் 2016-ல் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் செலுத்திய வைப்புத்தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு, கோவை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் 2016-ல் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயட்சை வேட்பாளர்கள், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தார்கள். இதற்காக அவர்களிடம் வைப்புத் தொகை வாங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இதனிடையே வேட்பாளர்கள் செலுத்திய வைப்புத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
அதன் அடிப்படையில் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் செலுத்திய வைப்புத் தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு கோவை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு