• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் பல்கலையில் காளானில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

July 10, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இப்பயிற்சி பல்கலையில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதில், முருங்கையில் முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ் ஆகியவையும், காளானில் காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பிழிதல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ரூ.1,770 ஆகும்.

மேலும் படிக்க