• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் படிப்பு: 2 நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்

May 11, 2019 தண்டோரா குழு

வேளாண் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு துவங்கிய இரண்டு நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகள் 27 இணைப்பு கல்லூரிகளில் பத்து பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் பதிவு பணிகள் கடந்த எட்டாம் தேதி துவங்கியது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 7 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்ப பதிவுகள் துவங்கி இரண்டு நாட்களே முழுமை பெற்று உள்ள நிலையில் நேற்று மாலை நிலவரப்படி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர்.

இதில் 60 சதவீதம் மாணவிகள் தான்.
வரும் வாரங்களில் மேலும் அதிக விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்ப்பதாக பல்கலைக் கழகம் தெரிவித்து உள்ளது. அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது
வேளாண் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளதை காட்டுகிறது.

மேலும் படிக்க