• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் ராஜினாமா

August 1, 2017 தண்டோரா குழு

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் அந்தோனி ஸ்காராமுக் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாததால், தகவல் தொடர்பாளராக இருந்த மைக் டுபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, அந்தோணி ஸ்காராமுக்(53) அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தொடர்பாளராக பதவி ஏற்றார்.

அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் அந்தோணி ஸ்காராமூக்சை தகவல் தொடர்பாளராக நியமித்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளராக இருந்த ரேயன்ஸ் ப்ரீபஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவியை ஜான் எப். கெல்லி இன்று (ஆகஸ்ட் 1) ஏற்றுக்கொண்டார்.

அமெரிக்க வெள்ளை மாளிகை தலைமை பணியாளராக பதவியேற்ற ஜான் எப். கெல்லி தனக்கு இந்த பதவியை வழங்கியதற்காக குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்பிற்க்கு நன்றி தெரிவித்தார்.

தன்னுடைய பணிகளை குறித்த அனைத்து தகவல்களையும் அமெரிக்க குடியரசு தலைவரிடம் தான் கூறுவேன். தலைமை பணியாளரிடம் கூற முடியாது என்று அந்தோணி தற்பெருமையாக கூறியதன் விளைவு தான், அவரை பணியிலிருந்து விலக்க காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக தகவல் தொடர்பாளர் அந்தோணி தனது சக ஊழியர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பேசியாதாலும், வெள்ளை மாளிகையில் பணிபுரிவோர் குடியரசுத் தலைவர் டிரம்ப் குறித்த தகவல்களை ரகசியமாக வெளியிட்டால், பணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அதிரடியாக பேசியது தெரிய வந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க