கோவை வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகராட்சி ஆணையாளர்க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டம் கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர்க.விஜயகார்த்திகேயன்உட்பட, அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மகேந்திரா கன்சல்டிங் பொறியாளர்கள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் வடிவமைப்பு, வரைவுத்திட்டங்கள், உள்கட்டமைப்புகள், போக்குவரத்துக்கு தேவையான உரிய சாலைகள், பயனாளிகளின் வசதிகள், திட்டத்திற்கு தேவையான நிலங்கள்,பேருந்துகள் நிறுத்துவதற்கு தேவையான வசதிகள், பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் திட்டத்திற்கான செலவினத்தொகை போன்ற விவரங்களை விளக்கக்காட்சி மூலம் விளக்கி காட்டினார்கள்.
நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி உயர், காவல்துறை,பொதுப்பணித்துறை போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் சிறப்பான ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைப்பதற்கு அவரவர்துறை சார்ந்த கருத்துக்களை இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு