• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெலிங்டனில் இருந்து 13 ஆம்புலன்ஸில் 13 பேரில் உடல்கள் சூலூர் விமான படை தளத்திற்கு கிளம்பியது !

December 9, 2021 தண்டோரா குழு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை சுமந்து 13 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சூலூர் விமானப்படைத் தளம் நோக்கி புறப்பட்டது.

கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு ஹெலிகாப்டரில் நேற்று சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பிபின் ராவத் உட்பட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அஞ்சலிக்காக வெலிங்டன் ராணுவ தளத்தில் வைக்கப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திர ராஜன் மற்றும் கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார், விமானப்படை தளபதி வி.ஆர்.செளத்ரி, ராணுவ தளபதி நரவானே ஆகிய முப்படை தளபதிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.

இதனைதொடர்ந்து,வெலிங்டனில் இருந்து 13 ஆம்புலன்ஸில் 13 பேரில் உடல்கள் சாலை மார்க்கமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இன்று மாலை 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளன.

மேலும் படிக்க