December 17, 2025
தண்டோரா குழு
2025-ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்திய வாடிக்கையாளர்கள் தங்களது இல்லங்களில் உள்ள வீட்டு உபயோக மின்னணுப் பொருட்களை தரம் உயர்த்தும் வகையில் புதுப்பித்து, புதிய ஆண்டை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில்,இந்தியாவின் நம்பிக்கைக்குரிய முன்னணி ஆம்னி-சேனல் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிறுவனமான ‘க்ரோமா’, வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்திக்கொண்டு 2026-க்குள் அடியெடுத்து வைக்கும் வகையில் ‘க்ரோம்டாஸ்டிக் டிசம்பர் விற்பனை’யை அறிவித்துள்ளது. டிசம்பர் 15, 2025 முதல் ஜனவரி 4, 2026 வரை நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இந்த ஆண்டின் மிகச் சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
2025-ம் ஆண்டின் இறுதி அப்கிரேட் வாய்ப்பாக இது அமைந்துள்ளது. க்ரோமா தனது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு இறுதி சிறப்பு விற்பனையாக ;க்ரோம்ஸ்டாஸ்டிக் டிசம்பர் விற்பனையை அறிமுகம் செய்திருப்பது குறித்து இன்ஃபினிட்டி ரீடெய்ல் லிமிடெட்டின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “டிசம்பர் மாதம் என்பது வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டைப் புதுப்பிக்கவோ, வரவிருக்கும் ஆண்டிற்காகத் தயாராகவோ, அல்லது பண்டிகைக் காலத்தில் வாங்க முடியாமல் பின் வாங்கலாம் என தள்ளி வைத்த பொருட்களை வாங்கவோ விரும்பும் காலமாகும்.
இந்த ‘க்ரோம்டாஸ்டிக் டிசம்பர்’ விற்பனையில் அதிரடி விலைக்குறைப்பு, கவர்ச்சிகரமான வங்கிச் சலுகைகள் மற்றும் மாதாந்திர தவணை வசதிகளை நாங்கள் வழங்கியுள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு முடியும் முன் தங்களுக்கு அவசியமான மதிப்புமிக்க பொருட்களை வாங்கிப் பயன்பெறலாம்,” என்று தெரிவித்தார்.க்ரோம்டாஸ்டிக் டிசம்பர் விற்பனை அனைத்து க்ரோமா விற்பனை நிலையங்களிலும் நடைபெறும்.இந்தச் சலுகையானது இந்த சிறப்பு விற்பனையில் பங்கேற்கும் வங்கிகள் அல்லது நுகர்வோர் நிதியுதவி நிறுவனங்கள் வழங்கும் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் தகுதியான பழைய பொருட்களின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பிற்கு உட்பட்டது.
மாதாந்திர தவணை அடிப்படையிலான பரிவர்த்தனைகளில், கேஷ்பேக் மதிப்பு மாறுபடலாம் அல்லது பொருந்தாமல் போகலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகள், தயாரிப்புகள் மற்றும் அவற்றின் வகைகளுக்கு மட்டுமே சலுகை செல்லுபடியாகும். மேலும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே சலுகை நீடிக்கும். சாம்சங் பொருட்களின் விலையில் அப்கிரேட்/கேஷ்பேக் மற்றும் பழைய சாதனத்தின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ஆகியவை அடங்கும். மேக்புக் ஏர் எம்4 விலையில் மாணவர் சலுகை அடங்கும்.