• Download mobile app
17 Feb 2026, TuesdayEdition - 3660
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெகு விமர்சையாக நடைபெற்ற பூ.சா.கோ செவிலியர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா

November 7, 2024 தண்டோரா குழு

பூ.சா.கோ கல்வி நிறுவனமானது 1984 ஆம் ஆண்டு முதல் தனது பெருமையையும், பாரம்பரியத்தையும் நிலை நாட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியான பூ.சா.கோ செவிலியர் கல்லுரியானது 1994 ஆம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இக்கல்லூரியானது தெளிவான குறிக்கோளோடும் உயர்ந்த சிந்தனையடனும் முன்னேற்ற பாதையில் பொன்விழா ஆண்டை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறது.அடிக்கல் நாட்டப்பட்ட நாள் நிறுவன நாள் ஆக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் நவம்பர் 7ம் தேதி -2024 இந்த நிறுவன நாள் வெகு விமர்சையாக பூ.சா.கோ மருத்துவ கலை அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் செவிலியர் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் மீரா சரவணன் வரவேற்பு உரையாற்றி துவக்கி வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக
பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் (TNAI) தலைமை அதிகாரி டாக்டர் ராய் கே ஜார்ஜ் கலந்து கொண்டார்.இவ்விழாவின் முதன்மை விருந்தினராக பூ.சா கோ கல்வி நிறுவனங்கள் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ்ணன் பங்கேற்றார்.

மேலும்,விழாவில் சிறந்த முன்னாள் மாணவர்களான கிளமென்ட் எஸ் தீபக் ராஜ் தலைமை செவிலியர் அதிகாரி Columcilies Hospitals,Ireland,P.செல்வராஜ், முதல்வர். SKS செவிலியர் கல்லூரி, சேலம் மற்றும் விஜயலட்சுமி தனசேகரன், தலைமை செவிலியர் மேலாளர் 11. Cork University Hospital,Ireland ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் படிக்க