• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வூசு தற்காப்பு கலை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிலான கல்வி உதவி தொகை

January 18, 2021 தண்டோரா குழு

வூசு தற்காப்பு கலை விளையாட்டு வீரர்கள் மத்திய அரசின் ஒரு கோடி ரூபாய் அளவிலான கல்வி உதவி தொகை பெற்று பயனடைந்துள்ளதாக வூசு கலை பயிற்சியாளர்கள் கோவையில் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வூசு சங்கத்தின் மாநில அளவிலான பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இதில் கோவை,சென்னை, ஈரோடு திருச்சி, உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வூசு தற்காப்பு கலை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா கால விதிமுறைகளின் படி மாநில அளவிலான போட்டிகள் நடத்துவது மற்றும் மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி முகாம், போட்டிகளுக்கான ஆன்லைனில் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய வூசு சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சுஹைல் அகமது கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

வூசு தற்காப்பு கலை போட்டிகளில் தற்போது அதிக அளவில் மாணவ,மாணவிகள் கலந்து கொள்வதாகவும்,அண்மையில் வூசு மாணவர்கள் மத்திய அரசு வழங்கிய ஒரு கோடி ரூபாய் அளவிலான கல்விதொகை பெற்று பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஜான்சன் பொருளாளர் கோபி கோவை மாவட்ட தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க