• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வரூபம் எடுத்த ஜெகன் மோகன் ரெட்டி – வரும் 30ம் தேதி ஆந்திர முதல்வராகிறார் !

May 23, 2019 தண்டோரா குழு

ஆந்திர முதல்வராக வரும் 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டமாக நடந்தது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. நாடு முழுவதும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது.

இதில், 141 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் 149 இடங்களில் முன்னிலையில் உள்ளார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான தெலுங்குதேசத்திற்கு ஏற்பட்ட இந்த பின்னடவை அடுத்து முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு இன்றே ராஜினாமா செய்கிறார்.இதையடுத்து, வரும் 30ம் தேதி ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க