• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாத நிலையில் எம்.பி. பதவி எதற்கு?: அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன்

March 30, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது ராஜ்ய சபா பதவியை ராஜினாமா முடிவு செய்துள்ளதாக அதிமுக எம்.பி. முத்து கருப்பன் தெரிவித்துள்ளார்.அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன்டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

காவிரிக்காக தற்கொலை போன்ற மலிவான செயலில் ஈடுபட மாட்டேன். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும்,அவையை முடக்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மக்களுக்கு குடிக்கவும்,விவசாயிகளுக்கு விவசாயம் செய்யவும் தண்ணீர் கிடைக்காத போது MP பதவி எனக்கு எதற்கு? விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.  வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யும் முடிவில் மாற்றம் இல்லை என்றார்.

மேலும், தனக்கு மாநிலங்களவையில் இன்னும் 2 ஆண்டுகள் பதவி உள்ளதாகவும் நாங்கள் வாக்களித்து தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.எனவே மக்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் மாநிலங்களவை தலைவரிடம் அடுத்த வாரம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் அவர்  கூறினார். முத்துக்கருப்பனின் பதவிக்காலம் 2020-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க