• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை சட்டகல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

August 2, 2017 தண்டோரா குழு

விவசாயத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடும் நெடுவாசல்,கதிராமங்கலம் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தை நிரந்தரமாக வெளியேற்றக்கோரியும், உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினரை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 112 நாட்களாக போராடிவருகிற மக்களுக்கு ஆதரவாகவும் சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து சுரண்டுவதற்கு முயற்சிகும் மத்திய மோடி அரசை கண்டித்தும், பதவியை பாதுகாக்க தமிகழகத்தை அடகுவைக்காதே என மாநில அரசை கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.இப்போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க