• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்காக மெரீனா கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது

March 29, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக மெரீனா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணமாக 40,000 கோடி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மாந்தரில் கடந்த 16 நாட்களாக நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று அவர்கள் பாம்பு கறி தின்னும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இன்று வரை அவர்களை பிரதமர் மோடி சந்திக்கவில்லை. எனினும், நேற்று மத்திய அமைச்சர்களை விவசாயிகள் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு மெரினாவில் போராட்டம் நடத்துவது என்று மாணவர்கள் சமூக ஊடகங்களில் செய்திகளை பரப்பி வந்தனர். இதையடுத்து, நேற்று முதல் மெரினாவில் இளைஞர்கள் குவிவதைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கிருந்த கடைகள் முற்றிலும் மூடப்பட்டன.

இதையடுத்து, இன்றும் கூடிய 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திடீரென, கடல் நீருக்குள் இறங்கி சில மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கரைக்கு அழைத்து வந்து கைது செய்தனர்.

மெரினா கடற்கரை மிகவும் பரந்து விரிந்தது என்பதால் எந்தவொரு பகுதியிலும் இருந்தும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

”எங்களது விவசாயிகள் செத்துக் கொண்டு இருக்கும் பொது நாங்கள் எப்படி கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியும். யாருமே அவர்களை கண்டு கொள்ளவில்லை. எங்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று இந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க