• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விற்கப்பட்ட ஆண் குழந்தையை 7 ஆயிரம் கி.மீ பயணித்து மீட்ட போலீசார்

August 18, 2017 தண்டோரா குழு

சீனாவில் பெற்ற தந்தையால் விற்கப்பட்ட ஆண் குழந்தையை 7 ஆயிரம் கிமீ பயணித்து சீன போலீசார் மீட்டுள்ளனர்.

சீனாவின் கோங்க்சி மாகாணத்தை சேர்ந்த சாவோ வேய் மற்றும் லிங்க் திருமணமாகாமல் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உண்டு. இதற்கிடையில் சாவோ வேய்க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புயிருப்பதை அறிந்த லிங்க், குழந்தையை சாவோ வேயிடம் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

எனினும் அவ்வப்போது தன் குழந்தையை பார்க்க லிங்க்சாவோ வேய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அனுமதி மறுத்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த லிங்க் தன்னுடைய குழந்தையை சாவோ வேறு யாருக்காவது விற்றுயிருக்க கூடும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவருடைய புகாரை ஏற்ற போலீசார் இதுகுறித்து சுமார் 3 மாதங்கள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த குழந்தையை சாவோ, அவருடைய தந்தையின் உதவியுடன் குஆங்டாங் மாகணத்திலுள்ள ஒரு தம்பதியினருக்கு 45,000 யூஆன் (5,245 பவுண்ட்)டுக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குழந்தையை தேடி சென்றனர். அப்போது அந்த குழந்தையை வாங்கிய தம்பதியினர், அதை வட சீனாவில் வசிக்கும் மற்றொரு பெண்ணுக்கு 59,000 யூஆன் (6,869 பவுண்ட்)டுக்கு விற்றுள்ளனர். அப்பெண் அந்த குழந்தையை தென் சீனாவில் உள்ள ஒருவருக்கு 226,000 யூஆன் (26,313 பவுண்ட்)டுக்கு விற்றுள்ளார். இறுதியாக குஆங்டாங் மாகணத்திலுள்ள சாந்தாவு என்னும் இடத்தில் 10,000 யூஆன் (11,643 பவுண்ட்)க்கு குழந்தை விற்கப்பட்டது.

சீன காவல்துறையினர், அந்த குழந்தையை தேடி சுமார் 7000 கிலோமீட்டர் தூரம் பயணித்து, அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த, அந்த குழந்தையின் தந்தை உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து அந்த குழந்தையை மீட்ட போலீசார், லிங்கின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க