“தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை விரிவாக பேசியுள்ளேன். விரைவில் நல்லது நடக்கும்” என்று தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் சந்தித்தார். சுமார் 2௦ நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழக அரசியலின் பரப்பான சூழல் குறித்தும், தனது ராஜினமா குறித்தும் ஆளுநரிடம் ஒ.பன்னீர்செல்வம் விவரித்ததாகக் கூறப்படுகிறது.
ஆளுநரைச் சந்தித்து விட்டு, தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் ஒ. பன்னீர்செல்வம் பேசுகையில், “தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவாகப் பேசியுள்ளேன். விரைவில் நல்லது நடக்கும். தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும். நல்லதே நடக்கும்” என்றார்.
தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தின் ஆளுநர் சந்திப்பைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு 7.3௦ மணியளவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே சசிகலா சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்