• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விதைகள் உற்பத்தி மூலம் இருமடங்கு வருமானம் ஈட்டலாம் வேளாண்மைத் துறை அதிகாரி தகவல்

November 9, 2022 தண்டோரா குழு

கோவையில் விதைப் பண்ணை திட்டத்தின் கீழ் விதைகள் உற்பத்தி செய்து வழங்குவதன் மூலம் இருமடங்கு வருமானம் ஈட்டலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஷபி அகமது கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் நெல், சோளம், பயறுவகை பயிர்கள், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களில் சான்று மற்றும் ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்வதற்கு விதைப்பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது. விதைப் பண்ணை அமைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் சான்று மற்றும் ஆதார விதைகள் வேளாண்மைத் துறை சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

இதற்கு இருடமங்கு வரை விலை கிடைக்கிறது. தானியங்கள் உற்பத்தியை காட்டிலும் விதைகள் உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கிறது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு விதைப் பண்ணை அமைத்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க