• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

September 16, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி செங்கல்சூளைகளுக்கு செம்மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில்,

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் முறைகேடாக செங்கல் சூளைகளுக்கு செம்மண் எடுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செங்கல்சூளைகளுக்கு விதிமுறைகளை மீறி 50 முதல் 150 அடி ஆழம் வரை செம்மண் எடுக்கப்படுகிறது, அனுமதியில்லாமல் ஏராளமான செங்கல்சூளைகள் இயங்கி வருகிறது. வனப்பகுதிகளை ஒட்டி செம்மண் எடுக்கப்படுவதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் செங்கல்சூளைகள் இயங்கி வருகிறது. முறைகேடாக இயங்கும் செங்கல்சூளைகளையும், விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க