• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விதிமீறிய பேனர்களை அகற்றாமல், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்? – உயர்நீதிமன்றம் கேள்வி

February 18, 2019 தண்டோரா குழு

விதிமீறிய பேனர்களை அகற்றாமல், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாகவும் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது குறித்து தமிழக அரசுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. விதிமீறிய பேனர்களை அகற்றாமல், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்?” சாலையில்தானே செல்கின்றனர். விதிமீறிய பேனர்களை அகற்ற 8 வருடங்களுக்கு முன்பே உத்தரவு பிறப்பித்தும் அமல்படுத்தாதது ஏன்?” என கடும் கண்டனத்துடன் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் டிராபிக் ராமசாமி வழக்கை மனுவாக தாக்கல் செய்ய உத்திரவிட்டனர்.

மேலும் படிக்க