• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விடுமுறையை கழிக்க ரூ.641 கோடி செலவு செய்த சவூதி மன்னர்

August 23, 2017 தண்டோரா குழு

மொராக்கோ நாட்டில் விடுமுறையை செலவழிக்க சவூதி மன்னர் சுமார் 641 கோடி செலவு செய்துள்ளார்.

சவூதி மன்னர் சல்மான், தனக்கு மிகவும் பிடித்த மொராக்கோ நாட்டில், தன்னுடைய ஒரு மாத விடுமுறையை மிகுந்த ஆடம்பரத்துடன் கழித்தார். அந்த நகரில் அவருக்கு சொந்தமாக சுமார் 74 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனையில் தங்கினார்.அவருடைய வருகையை முன்னிட்டு, கடந்த ஓர் ஆண்டு காலமாக அந்த அரண்மனையை புதுபிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும்,அங்கு ஹெலிகாப்டர் இறங்கும் தளமான ஹெலிபேட் அமைக்கப்பட்டது. சவூதி மன்னர் சல்மானை அந்நாட்டு பிரதமர் சதேதின் ஆத்மானி விமான நிலையம் வந்து வரவேற்றார்.மேலும்,மன்னரின் பாதுகாப்புக்காக 3௦ பேர் கொண்ட சிறப்பு படையும் அவருக்கு வழங்கப்பட்டது.

அவருடைய வருகையால் மொராக்கோ நாட்டிற்கு சுற்றுலா லாபம் 1.5 சதவீதம் அதிக லாபம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், சவூதி அரேபியாவில் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டு ஊதியமாக 33,௦௦௦ டாலர் கிடைக்கிறது. ஆனால், மன்னரின் விடுமுறைக்கு சுமார் 641 கோடி (1௦௦ மில்லியன் டாலர்) செலவு செய்யப்பட்டது, சவுதி அரேபியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க