• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் மக்கள் இயக்கம் தெற்கு மாவட்டம் சார்பில் சுதந்திர தின விழா

August 15, 2023 தண்டோரா குழு

கோவையில் 77வது சுதந்திர தின விழா விஜய் மக்கள் இயக்கம் தெற்கு மாவட்டம் சார்பாக கோலகலமாக கொண்டாடப்பட்டது.

நாட்டின் 77 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆணைக்கிணங்க பேரில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு மாவட்டம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் .மணி, பழனியம்மாள் ,ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும. விதமாக அவர்களை கொடியேற்ற வைத்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி,பேச்சு போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றன.இதில். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனைதொடர்ந்து தெற்கு மாவட்டம் சார்பாக கிணத்துகடவு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்க உள்ளதாக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைமை தொண்டரணி தலைவர் கிரிஷ், பயிலகம் ஆசிரியை நாகேந்திரன் உமாமகேஸ்வரி,இளைஞரணி துணை செயலாளர் முகமதுஆஷிக், அமைப்பாளர் செந்தில்குமார், ஆலோசகர் ரோகித், தொண்டரணி பொருளாளர் பிரவீன், இனைசெயலாளர் லோகநாதன், இணையதளம் பாலாஜி, எட்டிமடைபாலு, ஆனந்தராஜ், ரமேஷ் கவிதா, அருண்குமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க