• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாழ்த்து கூறிய ஸ்டாலின் நன்றி தெரிவித்த ரஜினி !

December 12, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்தின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தனது வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவருக்கு பிரபலங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! நலமுடன் என பதிவிட்டிருந்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து ரஜினி ட்வீட் செய்துள்ளார்.

அதில் ,வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தளபதி அவர்களே. உங்கள் நண்பன், ரஜினிகாந்த் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க