• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாலாங்குளத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

January 18, 2023 தண்டோரா குழு

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1500 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்இடி மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வஉசி பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

இதில் குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது. கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.48 கோடி மதிப்பில் நடைபயிற்சி பாதை, உணவு விடுதி, பார்வையாளர் அரங்கு, உடற்பயிற்சி கூடம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக ‘பிளேயிங் ஜோன்’ பணிகள், நடைபயிற்சி தளம், தண்ணீரில் மதந்து இருக்கும் மிதவை பாலம், படகு இல்லம் போன்றவை 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சுங்கம் பைபாஸ் பாலம் கீழ் பகுதியில் வாலாங்குளம் கரைப்பகுதியில் உணவகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் ஒருபகுதியாக சுத்திரிகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும் படிக்க