• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாகனம் ஓட்டும்போது காட்டாயம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்

June 20, 2017 தண்டோரா குழு

வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை ஓட்டும் போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது அசல் உரிமத்தை கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், வீதிமீறல்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை தற்காலிக/நிரந்தரமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைபோல், வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை ஓட்டும் போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது அசல் உரிமத்தை கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும். வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வேகமாக பயணித்தால் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிக நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், குடிபோதையில் வாகனம் ஒட்டினாலோ, சிவப்பு விளக்கை தாண்டினாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க