• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு பட்டாசுக்கு மட்டும் தடை ஏன் ? மத்திய அரசிற்கு உச்சநிதிமன்றம் கேள்வி

March 12, 2019 தண்டோரா குழு

பட்டாசுகளை விட வாகனங்களில் தான் காற்று மாசு அதிகம் பின்பு பட்டாசுக்கு மட்டும் தடை ஏன் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது குறித்து அரசுக்கு கவலை இல்லையா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பட்டாசுகளால் நாடுமுழுவதும் காற்று மாறு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது எனக்கூறி, பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ போட்டே மற்றும் எஸ்.ஏ நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு மும்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பட்டாசுக்கு மட்டும் தடை விதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும், பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டதால், பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது குறித்து அரசுக்கு கவலை இல்லையா? பட்டாசு தொழிலாளர்கள் வறுமையில் இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வாகனங்கள் மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உத்திரவிட்டனர்.

மேலும் படிக்க