• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வயிற்றில் விழுங்கி போதை மாத்திரை கடத்தல்…! 4கோடி மதிப்பிலான குப்பிகள் பறிமுதல்..!

May 10, 2022 தண்டோரா குழு

கோவை விமானத்தில் வந்த பயணி ஒருவர் 4கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.உகாண்டாவில் இருந்து கடந்த 6ஆம் தேதி விமானம் ஒன்று கோவைக்கு வந்துள்ளது.

வழக்கம் போல் பரிசோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சிக்கியுள்ளார்.இதனையடுத்து அந்த பெண்ணை சோதனை செய்த அதிகாரிகள் வயிற்றில் போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது.இதனையடுத்து கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அழைத்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு போதை மாத்திரைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

அப்பொழுது வயிற்றில் 81 மாத்திரை குப்பிகள் இருந்ததாவும்,இதன் மதிப்பு 4 கோடி என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து அந்த பெண்ணை கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சென்னை புழல் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க