• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வன விலங்குகளை காப்பாற்ற, சுரங்க திட்டத்தை கைவிட்ட சிலி அரசு

August 22, 2017 தண்டோரா குழு

சிலியில் அழிந்து வரும் வன விலங்குகளை காப்பாற்ற, சுரங்க திட்டத்தை அந்நாட்டு அரசு கைவிட்டுள்ளது.

சிலியின் கொகிம்போ நகரிலுள்ள ஆண்டேஸ் இரும்பு நிறுவனம், இரும்பு சுரங்கத்தை தொடங்க திட்டமிட்டிருந்தது. அந்த இரும்பு சுரங்கத்தால் சிலி நாட்டிற்கு சுமார் 2.5 பில்லியன் டாலர் லாபம் கிடைக்கும்.

ஆனால், அந்த சுரங்கம் அமைக்க திட்டமிட்டிருந்த இடத்திற்கு அருகில், தேசிய ஹம்போல்ட் பெங்குவின் சரணாலயம் உண்டு. மேலும் அந்த சரணாலயத்தில் அழிந்து வரும் வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதை அறிந்த சுற்றுசூழல் ஆர்வாளர்கள், அந்த திட்டத்தால், பெங்குவின் இனத்திற்கு கேடு விளைவிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்ட சிலி நாட்டின் அரசு,இந்த திட்டதிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

“ஒரு வேலை அந்த இரும்பு சுரங்கத்திற்கு அனுமதி வழங்கியிருந்தால், ஆண்டேஸ் இரும்பு நிறுவனம், சுரங்கத்தை தொடங்கி இரும்பு மற்றும் மில்லியன் எடை கொண்ட மற்ற உலோகங்களை பூமியிலிருந்து எடுத்து, அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, கொகிம்போ நகருக்கு அருகிலுள்ள கடல்பகுதியில் துறைமுகத்தையும் கட்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க