• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வன உலக நாள்-கோவையில் கல்லூரி மாணவர்கள் பேரணி

March 21, 2022 தண்டோரா குழு

இன்று வன உலக நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வனத்துறையினர் தனியார் அமைப்புகள் பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கோவையில் வனத்துறை சார்பில் லாலிரோடு பகுதியில் உள்ள வன கல்லூரியில் தனியார் கல்லூரி (ரத்தினம் கல்லூரி) மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உலக வன நாள் குறித்து விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.இதனை கோவை மண்டல வன பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியானது அவிநாசி லிங்கம் கல்லூரி சாலை வழியாக மீண்டும் வன கல்லூரியை வந்தடைந்தது.அதனை தொடர்ந்து கோவை வனக்கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 15 அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனையடுத்து 6 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் மற்றும் முன்னாள் மாவட்ட வன அலுவலர் பத்ரசாமி கோவை வன கோட்டம் உதவி வன பாதுகாவலர் செந்தில் குமார் கோவை வனச்சரகர் அருண்குமார் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை WNCT ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தின் மற்றும் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் குரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க