• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வந்தேமாதரம் கட்டாயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

July 25, 2017 தண்டோரா குழு

பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒரு முறையும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மாதம் ஒருமுறையும் கட்டாயமாக வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் திங்கள் அல்லது வெள்ளியன்று வாரம் ஒருமுறையாவது கட்டாயம் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும். அதே போல், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும், சமஸ்கிருதம் மற்றும் வங்க மொழியில் பாடத் தெரியாதவர்கள் தமிழில் மொழிபெயர்த்தி வந்தே மாதரம் பாடலை பாடலாம் என்றும், வந்தே மாதரம் பாடலை பாட விருப்பமில்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் அது, நாட்டின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது யூசுஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதநல்லிணக்கம் ஆலமரமாக வேர் விட்டுள்ள தமிழகத்தில் ஒரு மதத்தின் கடவுளை உருவகப்படுத்தியுள்ள வந்தேமாதரம் பாடலை பாடச்சொல்லி கட்டாயப்படுத்துவது மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.

விருப்பமில்லாதவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பது நடுநிலையான உத்தரவு போல் தோன்றினாலும், வந்தே மாதரம் பாடாதவர்களை தேசபற்று இல்லதவர்கள் போல் பார்க்கும் நிலை ஏற்படும்.எனவே சமூக நீதிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.

எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க