• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி!

July 4, 2018 தண்டோரா குழு

தவறான வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதியளித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஒருசில குறிப்பிட்ட ஜாதி பெண்கள் கற்பழிப்பு,இறைச்சிக்காக பசு மாடுகள் கடத்தல்,பிள்ளைகளை கடத்தும் கும்பல் போன்ற விவகாரங்கள் குறித்து வாட்ஸ் அப்பில் அதிக அளவில் வதந்திகள் பரவி வருகின்றன.இந்த வதந்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை அறியாமல் அப்பாவிகள் பலர் பொதுமக்களால் கொல்லப்படுகின்றனர்.

சாதாரணமாக யாரவது குழந்தை அருகில் சென்றாலே,அவர்களைக் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து,ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரைத் கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களினால், இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 30 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெவித்துள்ளனர்.

இதற்கிடையில்,வாட்ஸ் அப்பில் சமூக பிரச்சனைகள் காரணமாக வதந்திகளை பரவிவதை அந்நிறுவனம் தடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும்,இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளது.

இந்நிலையில்,மத்திய அரசுக்கு வாட்ஸ்அப் நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது.அதில்,வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி கூறியுள்ளது.தவறான தகவல்கள்,வதந்திகளைத் தடுப்பது சவாலான பணியாக இருக்கிறது என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க