• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் நடத்திய தடியடி ஏன் – முதல்வர் விளக்கம்

February 17, 2020 தண்டோரா குழு

கடந்த பிப்.,14ம் தேதி 2020-21 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விவாதம், சட்டசபையில் இன்று (பிப்.,17) நடைபெற்றது. விவாதத்தின்போது, திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும்நிலையில், சிஏஏ.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும், விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் தனபால், தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும், வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் நடந்த தடியடி குறித்து மட்டும் சட்டசபையில் பேச அனுமதிப்பதாகவும் கூறினார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA-வுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையில், கடந்த பிப்.,14ம் தேதி 2020-21 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விவாதம், சட்டசபையில் இன்று (பிப்.,17) நடைபெற்றது. விவாதத்தின்போது, திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும்நிலையில், சிஏஏ.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும், விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதைபோல் வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் நடத்திய தடியடி குறித்து எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து அந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

சிஏஏ.,க்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவதூறு கோஷங்கள் எழுப்பிய 40 ஆண்களை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றினர். பேருந்துக்குள் ஏறியவர்கள் ரகளையில் ஈடுபட்டு, பேருந்தின் முன்பக்க கண்ணாடியைச் சேதப்படுத்தினர். கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள வைகை மகால் கல்யாண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். அரசுப் பேருந்தை சேதப்படுத்தியது சம்பந்தமாக, பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பொது சொத்து (சேதம் மற்றும் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து, மாலை சுமார் 6 மணியளவில் கண்ணன் ரவுண்டா அருகில், இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் அனுமதியில்லாமல் அதிகளவில் கூடி கோஷமிட்டவாறு போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக செயல்பட்டனர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி பலமுறை காவல்துறை உயரதிகாரிகள் உட்பட காவல் துறையினர் அறிவுறுத்தியும், அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், அவர்களைக் கைது செய்வதாக மீண்டும் எச்சரிக்கப்பட்டனர். அதனையும் மீறி, காவல் துறையினரை நோக்கி போராட்டத்தினர், தண்ணீர் பாட்டில், செருப்பு, கற்கள் ஆகியவற்றை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இக்கலவரத்தில், இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமாருக்கு வலது கையில் காயமும், பெண் காவலர் உதயகுமாரிக்கு வலது கன்னம் மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளிலும், மற்றொரு பெண் காவலர் கலாவிற்கு வலது கண்ணில் காயமும் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், போராட்டக்காரர்கள் எறிந்த கல்லால் கண்ணன் ரவுண்டானாவில் பாதுகாப்பு பணியிலிருந்த மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் விஜயகுமாரிக்கும் தலையில் காயம் எற்பட்டு, மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்றார்.

போராட்டக்காரர்கள் கலவரத்தைத் தூண்டக் கூடாது எனவும், அமைதியான முறையில் தங்களுடைய கோரிக்கைகளை சொல்லிவிட்டு கலைந்து செல்லுமாறும் காவல் துறையினர் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். ஏற்கனவே போராட்டக்காரர்கள் அரசுப் பேருந்தை சேதம் செய்ததையும், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதையும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு, தடுப்புகள் அமைத்து, காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அரணாக இருந்தனர்.

சிறிது நேரத்தில், வெளியில் இருந்து வந்த போராட்டக்காரர்கள், அப்பகுதி மக்களை தூண்டி விட்டு காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை தள்ளிவிட்டு வெளியே வந்து அங்கு அரணாக நின்று கொண்டிருந்த காவல் துறையினரை ஆக்ரோஷமாக தள்ளிவிட்டு, சாலை மறியல் செய்ய முற்பட்டனர். அப்போது அவர்களைக் கைது செய்ய முற்பட்ட காவல் துறையினர் மீது கற்கள், பாட்டில் மற்றும் செருப்புகளை வீசினார்கள்.இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சுமார் 82 பேரை கைது செய்து, அரசு பேருந்தில் ஏற்றியபோது, பேருந்தில் ஏறியவர்கள், பேருந்துக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டு, அப்பேருந்தின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்தனர். மேற்படி போராட்டக்காரர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள வாணி மஹால் கல்யாண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர்.

CAA-வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலங்கள் நடைபெற்றது. காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் முழு பாதுகாப்பு அளித்தார்கள். இதுவரை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அந்த ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்துமே நடைபெற்று முடிந்திருக்கினறன. ஆனால் வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரிலே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல் கிடைத்திருக்கின்றன. ஆகவே, பொய் பிரச்சாரங்களையும், விஷம செயல்களையும் புறம் தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் எந்த ஒரு சிறுபான்மையின சகோதர சகோதரிக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அம்மாவின் அரசு அனுமதிக்காது. சிறுபான்மை இன மக்களுக்கு அம்மா அரசு எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க