• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரோபோ மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்வதை வியந்து பார்த்த மத்திய இணை அமைச்சர்

January 20, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் ரோபோ மூலம் பாதாள சாக்கடையை அடைப்புகளை சரி செய்யும் பணியினை மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 600 கிமீ தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனிதக் கழிவுகளை அகற்றவும் தனியார் நிறுவனத்தினரால் ரோபோ இயந்திரம் தயாரிக்கப்பட்டன. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள முதல் ரோபோ இயந்திரம் தனியார் நிறுவனத்தினரால் கொள்முதல் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இந்த ரோபோ இயந்திரம் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது. இதனிடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ. 2.12 கோடியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக 5 நவீன ரோபோக்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன. தற்போது இந்த ரோபோக்கள் அனைத்தும் தங்களது பணிகளை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றன.

இதனிடையே கோவை வந்த மத்திய இணை அமைச்சர் இன்று இந்த ரோபோக்களின் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சியில் ரோபோ மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்யப்படுவதை ஆர்வமுடன் பார்த்து அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார். மனிதர்களை ஈடுபடுத்தாமல் இயந்திரங்கள் மூலம் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது என பாராட்டினார்.

இந்த ஆய்வின் போது அருகில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், முதுநிலை வருமானவரித்துறை ஆணையர் பூபால் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.முன்னதாக பாதாள சாக்கடை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மத்திய இணை அமைச்சர் வழங்கினார்.

மேலும் படிக்க