• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரோட்டரி ‘Udaan 3.0’ திட்டம்: பெங்களூரில் இருந்து விமானத்தில் கோவை வந்த அரசு பள்ளி மாணவர்கள்

March 2, 2026 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பாலத்துறையில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக கல்விச்சுற்றுலா மற்றும் விமானப் பயணம் அமைந்தது.

கோவை மாவட்டம் பாலத்துறையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ குழந்தைகளை Rotary club of monarks Udaan 3.0 திட்டத்தின் கீழ் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து ரயில் மூலமாக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கோவையிலிருந்து ரயில் மூலம் புறப்பட்ட மாணவர்கள், பெங்களூரில் உள்ள அறிவியல் கண்காட்சிகள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு அறிவியல் சார்ந்த பல தகவல்களை அறிந்தனர்.

பின்னர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு 40 பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர் அவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் சண்முகம், சுதாகர், ஆசிஸ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் உற்சாகம்

“பாடப்புத்தகத்தில் பார்த்த விஷயங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. விமானத்தில் பயணித்த அனுபவம் எங்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது” என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த முயற்சி அரசு பள்ளி மாணவர்களின் கனவுகளை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க