எருசலேம் நகரிலிருந்து பினெய் பராக் நகருக்கும் சென்றுக்கொண்டிருந்த ஒரு பயணி, பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது தவறவிட்ட ரூ 6 லட்சத்தை அவரிடம் அந்த பேருந்தின் ஓட்டுநர் ஒப்படைத்தார்.
ரமாதன் ஜம்சோம் என்னும் 35 வயது பேருந்து ஓட்டுநர் எருசலேம் நகரிலிருந்து பினெய் பராக் நகருக்கும் பேருந்து ஒன்றை கடந்த புதன்கிழமை ஓட்டி சென்றுள்ளார்.
யூத இனத்தை சேர்ந்த ஒருவர் அந்த பேருந்தில் பயணித்தார். பினெய் பராக் நகருக்கும் வந்ததும், கீழே இறங்கிய அவர், தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுக்கும்போது பத்தாயிரம் அமெரிக்க டாலர், இந்திய மதிப்புப்படி ரூபாய் 6 லட்சம் கீழே விழுந்தது. ஆனால், அதை கவனிக்காமல் சென்றுவிட்டார்.
கீழே விழுந்து கிடந்த பணத்தை பார்த்த பேருந்து ஓட்டுநர், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, பேருந்து அலுவலகத்திலிருந்த அதிகாரியிடம் அந்த பணத்தை தந்து, நடந்ததை அவரிடம் தெரிவித்தார்.
உடனே, அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, அதிகாரியும் ஓட்டுநரும் அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு சென்று அதை தந்து விவரத்தை கூறினர்.
காவல்துறை அதிகாரி, உள்ளூர் செய்தித்தாளிலுள்ள காணாமல்போன பொருள்கள் பக்கத்தில், காணாமல்போன பணத்தை குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டார். அந்த செய்தியை கண்ட அந்த பணத்தின் உரிமையாளர், காவல்துறை அதிகாரியை தொடர்புக்கொண்டார்.
அந்த பணத்தின் உரிமையார் அவர் தான், என்று உறுதி செய்த பிறகு, அந்த பணத்தை காவல்துறை அதிகாரி ஒப்படைத்தார். நேர்மையாக நடந்துக்கொண்ட அந்த பேருந்து ஓட்டுநருக்கு அந்த உரிமையாளர் மனதார நன்றி கூறினார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு