• Download mobile app
25 Apr 2026, SaturdayEdition - 3727
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

May 18, 2017 தண்டோரா குழு

சென்னை கோடம்பாக்கத்தில் ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இன்று காலை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் அருகே உள்ள ஜக்கிரியா காலனி 2-வது தெருவில் போலீசாருக்கு உடை தைக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கோடம்பாக்கம் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இதில், ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூ.500,1000 நோட்டுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும் ஏஜெண்டாக அந்த கடையின் உரிமையாளர் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தற்போது வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் நடத்தும் விசாரணையில் பல உண்மைகள் வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க