October 22, 2026
தண்டோரா குழு
ஆசியாவின் முதல் பட்டியலிடப்பட்ட டெபாசிட்டரியும், 19 கோடிக்கும் அதிகமான டீமேட் கணக்குகளின் நம்பகமான பாதுகாவலருமான சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் , ‘ரீமேஜின் ஐடியாத்தான் 2.0’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சிடிஎஸ்எல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நேஹால் வோரா கூறுகையில்,
நாளுக்கு நாள் மேலும் பன்முகத்தன்மை கொண்டதாகவும்,டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாகவும் மாறிவரும் முதலீட்டாளர்களின் நிதி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதுமையான தீர்வுகளை உருவாக்க இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு இந்தத் திட்டம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ‘புரிதலுடன் கூடிய முதலீடு எளிதானது’ என்ற கருப்பொருளின் கீழ் கடைப்பிடிக்கப்படும் ‘உலக முதலீட்டாளர்கள் வாரம் 2026’-ன் போது இந்த ஐடியாத்தான் தொடங்கப்பட்டுள்ளது.
செபி மற்றும் சிடிஎஸ்எல் உள்ளிட்ட பங்குச் சந்தைப் பங்காளர்களை ஒன்றிணைத்து, நிதிச் சார்ந்த அறிவை வலுப்படுத்தவும், விழிப்புணர்வோடு கூடிய முதலீட்டுப் பழக்கங்களை ஊக்குவிக்கவும், நிதி மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ள செபியின் ‘ப்ராஜெக்ட் ஜாக்ரூக்’ திட்டத்தின் முதலீட்டாளர் விழிப்புணர்வு மற்றும் கல்வி இலக்குகளுக்குத் துணையாக இந்த ஐடியாத்தான் அமைகிறது. ‘புரிதலுடன் கூடிய முதலீடு எளிதானது’ என்ற கருத்தின் மையப்புள்ளி என்னவெனில், விழிப்புணர்வு பெற்ற முதலீட்டாளரே அதிக அதிகாரமும் தெளிவும் கொண்ட முதலீட்டாளர் ஆவார்;
மேலும் முதலீட்டாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய வடிவம், மொழி மற்றும் வழியில் தகவல்கள் தெரிவிக்கப்படும்போது மட்டுமே அந்த விழிப்புணர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆகும். ரீமேஜின் ஐடியாத்தான் 2.0, மாணவர்கள், புதிய முதலீட்டாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு நிதி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் இணையப் பாதுகாப்புக் கல்வியை மேலும் எளிதாகவும், பொருத்தமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாற்றுவதற்கான புதுமையான வழிகளை உருவாக்குமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து இந்தக் கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுக்கிறது.என்று தெரிவித்தார்.
இந்த ‘ரீமேஜின் ஐடியாத்தான்’, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நிதிச் சார்ந்த அறிவையும் பங்குச் சந்தை விழிப்புணர்வையும் வலுப்படுத்த முயலும் செபியின் ‘பயிற்சியாளர்கள் மூலம் பல்கலைக்கழக/கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டுதல்’ திட்டத்திற்கும் துணையாக அமைகிறது.டிஜிட்டல் தளங்கள், மொபைல் செயலிகள், இணையதளங்கள், சேட்பாட்கள் , விளையாட்டுகள், உருவகப்படுத்துதல்கள் , கற்றல் தொகுதிகள் , விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சமூக மாதிரிகள் அல்லது ஏஐ-செயல்படுத்தப்பட்ட உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள், தொழில்நுட்பங்கள், விநியோக மாதிரிகள் அல்லது அணுகுமுறைகளில் தங்கள் தீர்வுக்கு மிகவும் பொருத்தமான எதையும் பங்கேற்பாளர்கள் தாராளமாகத் தேர்வு செய்யலாம்.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர், பிஎஸ்இ தலைவர்,திறன் மேம்பாட்டிற்கான பிரதமரின் ஆலோசகர் மற்றும் தற்போது கர்மயோகி பாரத் அமைப்பின் தலைவர் என வணிகம், பொதுக் கொள்கை மற்றும் நிறுவன உருவாக்கத்தில் முதன்மையான தலைமைத்துவப் பலன்களைக் கொண்ட எஸ்.இராமதுரை இந்நடுவர் குழுவிற்குத் தலைமை தாங்குவார். பதிவுகள் அக்டோபர் 7, 2026 முதல் தொடங்கியது. முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு மொத்தமாக ரூ.11.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.21 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 100 கல்வி நிறுவனங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பதிவுகளைப் பெற்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட சிடிஎஸ்எல்-ன் தொடக்க விழாவின் தொடர்ச்சியாகவே இந்த ‘ரீமேஜின் ஐடியாத்தான் 2.0’ கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது;