• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராயல் தியேட்டர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

March 1, 2022 தண்டோரா குழு

கோவை பெரிய கடை வீதி ராயல் தியேட்டர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் டிராவல்ஸ் வைத்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகாவில் நடைபெறும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஈரோட்டில் இருந்து வந்த மூன்று பேரை தனது காரில் அழைத்துக்கொண்டு கோவை வந்துள்ளார்.

அப்போது கார் பெரியகடைவீதி ராயல் தியேட்டர் அருகே வந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை எழுந்துள்ளது. இதையடுத்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட தங்கராஜ் மற்றும் காரில் இருந்த 3 பேர் உடனடியாக காரை விட்டு வெளியே இறங்கினர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அருகே இருந்த தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் துவங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கான காரணமாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க