• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராணுவ வீரர்களுக்கு புரதசத்து மிக்க உணவுகள் வழங்கப்படும் – அருண் ஜெட்லி

July 22, 2017 தண்டோரா குழு

இந்திய ராணுவ வீரர்களுக்கு, புரதசத்து மிக்க பிஸ்கட், சிக்கன் மற்றும் மட்டன் உணவு வகைகள் வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

“இந்திய எல்லையில் கடும் குளிர் மற்றும் மோசமான வானிலையில் நமது இந்திய ராணுவத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பல்வேறு உட்டசத்து மற்றும் புரத வகை உணவுகளை டி.ஆர்.டி.ஒ அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு முதல் வீரர்களுக்கு கோழி இறைச்சி, பிஸ்கட், புரதசத்து மிக்க மட்டன் , முட்டை போன்ற இரும்பு மற்றும் புரதம் சத்துமிக்க உணவு வகைகள் மற்றும் உடல் சோர்வை நீக்கும் துளசி பார் ஆகியவை வழங்கப்படும்,” என்று எழுத்து மூலம் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் படிக்க