• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராணுவ வீரர்களுக்கு தனது ரத்தத்தில் கடிதம் எழுதி அஞ்சலி செலுத்திய இளைஞர்

February 21, 2019 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி சி ஆர் எஃப் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தி அதில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து நாடெங்கும் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரதமருக்கும் கண்டன குரல் மற்றும் அவர்களுடைய தேசியக்கொடிகளை பெரிதும் நமது இந்திய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர்.

இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் கோவை பேரூர் அடுத்த மாதம் பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் சந்தோஷ் என்பவர் தன்னுடைய ரத்தத்தில் கடிதம் எழுதி வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தனது அஞ்சலி கடிதத்தில் பாரத பிரதமரே தீவிரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிய உடனடியாக பதில் தாக்குதல் நடத்துங்கள் நான் ராணுவத்தில் பணி புரிய ஒரு ரூபாய் கூட சம்பளமின்றி ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளை அளிக்க விரும்புகிறேன் என்று இரண்டு மூன்று பக்கங்களில் எழுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் இந்த அட்டைகளை பொது இடங்களில் ஒட்டியுள்ளார் ரத்தத்தால் எழுதிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க