• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராணுவ வீரர்களின் குறைகளைத் தெரிவிக்க “வாட்ஸ் அப்” எண் அறிமுகம்

January 28, 2017 தண்டோரா குழு

ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளைத் தெரிவிப்பதற்கு வசதியாக பிரத்யேக “வாட்ஸ் அப்” எண்ணை ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிமுகப்படுத்தியுள்ளார்.

எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தங்களுக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரர் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ நாடு முழுவதும் பரவிய நிலையில் வேறு சில பி.எஸ்.எப். வீரர்களும், தங்கள் குறைகளைச் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை வெளியிடக் கூடாது என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக +91 9643300008 என்ற பிரத்யேக “வாட்ஸ் அப்” எண்ணை ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிமுகப்படுத்தினார்.

மேலும் படிக்க