• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜேந்திர பாலாஜி அதிமுக அமைச்சரா? ஆர்.எஸ்.எஸ் அமைச்சரா? எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்த வேண்டும் – கே பாலகிருஷ்ணன்

February 7, 2020

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கோவை மாவட்ட கம்யுனிஸ்ட் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கே பாலகிருஷ்ணன்

கொரனோ வைரசைவிட மோசமான விளைவுகளை பாஜகவும், மத்திய மோடி அரசும் இந்தியாவில் ஏற்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் பட்ஜட்டை கண்டித்து 12 முதல் 18 வரை கண்டன இயக்கம் நடத்தப்படும். விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் குற்றவாளிபோல் நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல. பாஜக குறித்து மாற்று கருத்துடன் விஜய் பேசி வருவதாலேயே இந்த மிரட்டல். வேண்டியவர்களுக்கு ஒரு அனுகுமுறையும், வேண்டாதவர்களுக்கு ஒரு அனுகுமுறையுமாக பாஜக செயல்பட்டு வருகிறது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மத வெறியை தூண்டும் விதமாக பேசி வருவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. அவர் அதிமுக அமைச்சரா, ஆர் எஸ் எஸ் அமைச்சரா என எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்த செயலை வேறு யாராவது செய்திருந்தால் உரிய நடவடிக்கை இல்லாமல் இருந்திருக்குமா திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சில துறையில் உள்ள ஐ ஏ எஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பணி செய்ய முடியாமல் பணி ஓய்வு வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளது.தமிழகத்தில் உள்ள ஊழலை கண்டுபிடிக்க நீதிபதி தலைமையில் சி பி ஐ விசாரணை வேண்டும். பாஜகவின் குரலாக, அமித்ஷாவின் குரலாக ரஜினி மாரிப்போயுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் மதுக்கடைகளை தொடர்ந்து இயக்குவது மேலும் சமுதாய சீரழிவைஇருந்திருக்குமா என்றார்.

மேலும் படிக்க